சங்கீத் குமார்

சங்கீத் குமார் என் வாழ்வின் பெரும் பகுதியை ஆக்கிரமித்த மனிதர். என் நண்பன். கல்லூரி பேருந்தில் தொடங்கிய நட்பு. எனக்கு கேரள நாட்டின் பெருமையையும் மலையாள சினிமாவின் அழகையும் அறிமுகப்படுத்திய தோழன். எங்களை இணைத்த பாலம் கலைப் பார்வை. எனது கற்பனை வளத்தை வளர்த்த மனிதர்களில் இவரும் ஒருவர். சங்கீத்தின் தமிழ் ஆர்வம் எனது பசிக்கும் தீனி போட்டது. கல்லூரி பேருந்தில் நாங்கள் உரையாடிய கதைகள், கவிதைகள் எங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. கல்லூரியில் நாடகங்கள் இயற்றினோம், என் நடன ஆசானகவும் உருவெடுத்தார். நடனம் இன்றும் எனக்கு எட்டா கனியகவே இருந்தாலும் என்னையும் மேடை ஏற்றிய பெருமை அவருக்கே. எங்களை சுற்றி அனைவரும் நிஜத்தில் காதலிக்க, அப்பருவத்தில் காதல் எங்களுக்கு கற்பனை காவியம், கற்பனையில் முழுகியதால் என்னவோ! . கல்லூரி, அரசு பேருந்து, பறக்கும் ரயில், சென்னையின் தெரு வீதிகள் எங்கள் நினைவுகளின் ஒரு அங்கம். வட சென்னை எனக்கு அறிமுகமானது சங்கீத்தால்தான். பொறியியல் கல்லூரி காலங்கள் இனிமையாய் கடந்தது கலை வளர்ப்பதில். கல்லூரி இறுதி ஆண்டில் எங்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து முரண்பாடுகள் எங்கள் நட்பை வலுவடையவே செய்தன, எங்கள் கல்லூரி நட்பை வாழ்நாள் நட்பாக மாற்றியது. எதிர்பாராதவிதமாக ஒரே

நிறுவனத்தில் எங்களுக்கு வேலை கிடைத்தது. புது சூழல், புது நட்பு வட்டாரம், அங்கும் எங்கள் கலை தாகம் தொடர, மாதத்திற்கு மூன்று சினிமா, இளைய தளபதி விஜய் படங்களின் முதல் காட்சி, வாழ்வின் அடுத்த கட்ட ஆலோசனைகள் என வாழ்க்கை நகர்ந்தது. திடீர் அவசர பயணமாக சங்கீத்தின் சொந்த ஊரான பாலகாடுக்கு முதல் முறை ஜெனரல் கம்பார்ட்மெண்டில் ஒரு அடி இடத்தில் அமர்ந்து கூட்ட நெரிசலில் பயணம் செய்தது புதிய அனுபவமாகவே இருந்தது. இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போதும், கடற் கரைக்கு நண்பர்களுடன் செல்லும் போதும் சங்கீத் சங்கீதத்தின் ரசிகன் நான். நாங்கள் குறும்படம் எடுக்க பல முயற்சிகள் செய்து ஒரு நாள் ஃபோட்டோ ஷூட் போனோம் வீட்டில் கேமரா பேட்டரியை மறந்து. பல ஆண்டுகள் குறும்படம் எடுக்க திட்டம் போட்டு ஒரு வழிகாயக எனது கேமராவில் சங்கீத்தின் நிசையதார்த்த சினிமேட்டிக் வீடியோ எடுத்து ஆசை நிறைவேறியது. சங்கீத்தின் திருமணம் அன்று எனக்கொரு சாகச பயணம் காத்திருக்கிறது என்பதை நான் அறியவில்லை. தொடரும்.. (மற்றொருவரில்)